கவி தாய்க்கு - 2
மக்குபையன் மாமேதை ஆகிறான்,
எண்களை கூட்ட சொன்னதும்
துடைப்பம் கையில் எடுக்கிறான்
தன் குடும்ப சூழ்நிலைக்காக...!
விரலை விட்டு எண்ண சொல்கிறார்
விட்டதும் சரியாக எண்ணுகிறேன்
விரலின் பதிவை கன்னத்தில்
அப்பா ஒரு கணக்கு வாத்தியார்...
உயிரை விட உன்னதம்
உன்மையான அன்பு- அதை
உனக்கு தாயான எனக்கு மட்டும் தருகிறாய்
கருவறைக்குள் பிஞ்சு கால்களால்...
முகத்தில் இருக்கும் சோகங்கலை,
முகமூடி போட்டு மறைக்கின்றேன்
இதழ்கள் தொட்ட உந்தன் புன்னகையில்...
முகநூலில் முகத்தை நுழைத்தேன்
சட்டென்று திருமணம் ஆனது எனக்கு
பிள்ளை ரொம்ப நல்லவன்
பெருமிதத்துடன் தாய்...