புதிய பூமி
பார்வை வெளிகளுக்கு அப்பால்
சிந்தனை வெளியில் இது
என் புதிய பூமி
இங்கு சண்டையில்லை
சச்சரவுகள் மலியவில்லை
சங்கட சந்தர்ப்பங்களில்லை
பசி பட்டிணியில்லை
பல் பாரபட்சமில்லை
இன வன்முறைகளில்லை
குல களியாட்டமில்லை
மத வெறியாட்டமில்லை
வெட்டு வெற்றுடல்களில்லை
பள்ளிப் பருவத்தை
எவரும் பறித்து விடவில்லை
பாலகனின் ஆசைகளை யாரும்
மறுத்துப் பேசவில்லை
இயற்கையின் இன்சுவாசம்
இதமாய் இணைந்துகொள்ள
கம்பும் கேழ்வரகும்
காற்றில் அசைந்தாட
ஓடையின் சலசலப்பில்
மென் தேகத்தில் ஈரம் காய
மெல்லிய தென்றல் வந்து
காதோரம் தூது சொல்ல
கனவுகளின் பிடியில் என்
கற்பனை உலகம்
சிந்தனையின் சிறைப்பிடிப்பில்
நீண்டகால கைதியாய்
நிரந்தரமாய் என்னுள்ளே