பேருந்து நிறுத்தம்

இதற்குப்பெயர் பேருந்து நிறுத்தமாம்
இங்கு பெரும்பாலும் நிற்பதென்னவோ
பயணிகள் தான் !

நிற்கும் பயணிகளிடம் பழங்களை
விற்கும் வியாபாரிகளும்

பேருந்துக்காக நிற்போரிடம்
அவ்வப்போது சவாரி கேட்டுச் செல்லும்
ஆட்டோ ஓட்டுனர்களும்

தத்தம் வழித்தட எண்களை
எதிர்நோக்கும் கண்களும்

நிற்கும் பெண்களிடம்
தம் விழித்தடம் பதித்திடும்
சில ஆண்களுமாய்
பேருந்து நிறுத்தம்

பெயரில் வேண்டும்
திருத்தம்.

எழுதியவர் : PG வெங்கடேஷ் (11-Mar-16, 8:42 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
Tanglish : perunthu nirutham
பார்வை : 105

மேலே