உனக்கும் எனக்கும்
உள்ளங்கையில் தாங்கும்
மாமியார் -
பூனைக்குட்டியாய் சுற்றிவரும்
கணவன்
வாகுப்பில் முதலாய்
பிள்ளை
மாதத்துக்கு ஒன்றாவதெனப்
பட்டுப் புடவை
வைர ஒட்டியாணம்
இத்தியாதி இத்தியாதிஎன
நீ
பெருமைப் பட்டுக் கொள்ள
வெகு விடயங்கள் உண்டு
உனக்கு
ஆனால் எனக்கோ
அவ்வப்போதென
வந்துபோகும்
பிணவாடை
கல்லறைப் புழுக்கம்
தவிர்த்து
உயிர் கூட உடனில்லை
உரையாட -
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
