அண்ணா பசிக்குது

முன்னூற்று தொண்ணூறு
ரூபாய் கொடுத்துவிட்டு
வாங்கி வந்த உணவு பார்சல்
வண்டியில் வைக்கும் நேரம்
"அண்ணா ..பசிக்குது ..
எதாவது..."
என்ற பெண்மணி
பிச்சை எடுப்பவளாக
தெரியவில்லை..
பத்து ருபாய் தந்ததும்
"கும்பகோணம் பஸ்
இங்க நிக்குமா? "
என்று கேட்டு நின்றவள்
கையில் நூறு ரூபாய்
தந்து விட்டு
நகர்ந்தேன் ..
இருபதாண்டுகளுக்கு முன்
இறந்து போன
என் தங்கையின்
அண்ணனாக ..!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (12-Mar-16, 4:14 pm)
பார்வை : 92

மேலே