பிச்சாண்டி

மிதிவண்டி ஓட்டும்
பிழைப்புதான்..

என்னை ..
பள்ளிக்கு கூட்டிப் போன
பிச்சாண்டிக்கு ..!

அடிக்கடி வராமல்
மட்டம் போட்டு
மறுநாள் மாலையில்
வந்து நிற்பார்
என் அப்பாவிடம்
காசுக்கு ..!

சின்னப் பையன் என்று
பொய் சொன்னாரோ
இல்லை உண்மையோ ..
குறைந்தது ஆறேழு முறை
"நேற்று எனக்கு கல்யாணம் "
என்பார் ..!

வண்டிமேடு பக்கம் போகும்
போதெல்லாம் விசாரிப்பதுண்டு
அவர் என்ன ஆனார் என்று ..
யாருக்குமே தெரியவில்லை!

அது சரி ..
பிச்சாண்டி ..

என் நினைவில் மட்டும்
எதற்காக
நாற்பது வருடங்களுக்கு பிறகும்
நிற்கிறீர்கள் ..?

அப்படி
என்ன செய்து விட்டேன்
நான் உங்களுக்கு ..?

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (12-Mar-16, 4:12 pm)
பார்வை : 70

மேலே