அனுபவக் கவிதை
மூன்று லட்சத்து
எண்பத்தி நான்காயிரத்து
நானூறு கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள
நிலவின் அழகை
கண்டு ரசித்துக் கவிதை
எழுத ..
நிலவுக்கு போய் திரும்பி வந்த
அனுபவம் கொண்ட
ஆர்ம்ஸ்ட்ராங் மட்டுமே
தகுதி உள்ளவன்
என்று சொல்பவரை
மனோவியாதி உள்ளவர்
தனியாக சிரித்துக் கொள்பவர்
என்று எண்ணி விடாதீர்கள் ..
ஒரு வேளை..
தினமும் நிலவில் விழுந்து
எழுந்து வருபவராகவும் கூட
இருக்கலாம் அவர் ..