பலமுக இலக்கை
தேனே மானே கற்கண்டே
என்று விழித்தக் காலம் போய்
ஸ்வீடி டார்லிங் பிலொவெட்
என்று கூப்பிடும் வேளையிலே
கணவன் பெயர் சொல்ல மறுத்து
சொல்வதற்கு பல சாட்சிகளை அழைத்து
நாராயணன் என்றால் பெருமாளைத் தேடி
முருகன் என்றால் குமரனை துணைக்கு கூ ப்பிட்டு
வாழ்ந்த காலங்கள் மலையேற
இன்று சீனு, சிவா என்று பெயர் சொல்லிக் கூவ
வாடா போடா என்று கொஞ்சிக் குலவ
இலை மறை காய் மறை வாக நடந்தவை எல்லாம்
வெட்ட வெளியில் அரங்கேற
பாரதமும் பன்முகத் தொழிலில் சிறக்க
கலாச்சாரமும் பலமுக இலக்கைத் தொட
முன்னேற்றம் என்று நாமும் கைக் கொட்டி
ஆர்பரித்து சிலாகிக் றோம் மகிழ்வோடு
.