சருகோசைகசைகள்
சல சலத்தோடும் நீரோடை
-----------------அதன் சலனங்களில்
எத்தனை ராகங்கள் தாளங்கள் !
சிலு சிலுத்திடும் பசுமை இலைகள்
-----------------அதன் சிலு சிலுப்புகளில்
எத்தனை இனிய பசுமை ஓசைகள் !
காய்ந்து உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகள்
-----------------காலடிகள் படும் வேளையில்
எத்தனை சருகோசைகள் !
பசுமை நாட்களின் சுயசரிதையை
--------------உரக்கச் சொல்லுதோ ?
----கவின் சாரலன்