அழியாத நிலைகள்

உடைந்த கிளைகள்
சிதிலமடைந்த மரம்
உதிர்ந்த இலைகள்
எல்லாம் ஒன்றாகவே
இயல்புகள் மாறாமல்
நலிந்த நிலையிலும் ஒன்றாகவே
அங்கேயே மடிந்திடும்
அவைகள் ஒற்றுமை சின்னங்கள்
ஒருவரோடொருவர் வேற்றுமை
பாராட்டும் மனிதம் முன்
ஒடிந்த மரமும்
உன்னத காவியம்
சோகங்களாய் வார்க்கப்பட்ட
நீங்கள் இன்று
பாடங்களாய் எங்களுக்கு
பாடங்களாய் மாறிய விநோதம்
தனிமையின் பிரதிபலிப்பாய்
உணர்ந்த உங்களை
கூட்டுறவின் மேன்மையாய்
காட்டிடும் எம் கண்கள்
பேராபத்தின் முன்னறிவிப்பாய்
தோன்றிய நீங்கள் இன்று
உண்மையான உயிரோட்டமாய்
நீங்கள் அப்படியே
நாங்களும் அப்படியே
ஆனால்
பார்க்கின்ற பார்வைகளின்
மனங்களின் மாண்பில்
தேவைகளின் பேரில்
வித்தியாசங்கள் கூறிடும்
வளங்களோ,அவலங்களோ
விழுந்த நிலையிலும்
பிறரை உயர்த்தவே நீங்கள்
சேவையை எதிர்பார்த்தே நாங்கள்
அழிவிலும்
அழியாத நிலைகள்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-Mar-16, 6:26 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : aliyatha nilaikal
பார்வை : 117

மேலே