பால்கனி ரோஜா செடி
விறு விறுவென வெளிநாடு செல்ல
ஆயத்தமாகும் நண்பன்,
என்னிடம் வந்து, இரண்டு பூச்செடிகளை
எடுத்துக் கொள்ளமுடியுமா என்றான்?
மறுக்க முடியவில்லை,
மனைவியிடம் முறையிட்டேன்.
வளர்க்கலாம் மறக்காமல்
வாங்கிக்கொள் என்றாள்.
சம்பந்தமே இல்லாத ஒரு உறவு,
மலர்ந்த படி எங்களிடம் சேரத் துடிப்பதாய்,
வேகமாய் துடிக்கும் என் இதயம்
விளங்க வைத்தது.
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய
பனியன் நகரத்தில் பிறந்து வளர்த்ததாலே,
மரத்தோடும், செடியோடும், நீரோடயோடும்
தொடர்போ, இனக்கமோ இருந்ததே
கிடையாது.
ஆகையாலே, இந்த இரு செடிகளை
என்ன செய்வது? எப்படி வளர்ப்பது?
ஒன்றுமே புரியவில்லை.
திடகாத்ரமான நண்பன்,
சர சரவென தொட்டிசெடியை
ஆறத் தழுவி மூன்றாம் மாடியில் இருந்து,
மின்தூக்கி மூலம் இறக்கி,
காரின் டிக்கியில் ஒன்றன் பின்
ஒன்றாக ஏற்றினான்.
வளர்ப்பது சுலபம்,
பெரிதாக பராமரிக்க தேவையில்லை
என்று கூறி வழியனுபினான்.
ஒரு செடி நந்தியா வட்டம்,
மற்றொன்றோ ரோஜா.
லேசான குதூகளிப்போடு
காரில் பயணமானேன்.
ஒலிக்கும் பாடல்களை நிறுத்திவிட்டு,
செடியை எங்கே வைக்க,
எப்படி வைக்க,
என்ற பல பல எண்ண ஓட்டங்கலோடே
காரை உருட்டினேன்.
வேகமாய் சென்றால்,
செடி ஒடிந்து விடமோ?
தொட்டி பிளந்து விடுமோ?
என்று அச்சம் வேறு...
எப்படியோ எங்கள் அடுக்ககம்
வந்தடைந்தேன்.
டிக்கி திறந்து,
முதல் செடியை இறக்க தூக்குகிறேன்,
முடியவில்லை.
கனமான கணம்.
மூச்சுபிடித்து, முக்கித் தக்கி
தூக்கி, அரவணைத்த படி,
மாடிப் படி ஏற ஆரம்பித்தேன்.
இரண்டாம் தளத்திருக்கு,
ஏறியே ஆகவேண்டும்.
அன்று தான் மின்தூக்கி இல்லாத வீட்டை
ஏன் வாங்கிநோமென்று அலுத்துக்கொண்டேன்.
தட தடவென,
நடை வாசல் புகுந்து,
யோசித்து வைத்த பால்கனிக்குல்
நுழைந்தேன்.
ஆ!! அங்கே வேண்டாம், அங்கே வேண்டாம்
என்று, வழக்கம் போல்,
மனைவியின் மாற்று
யோசனையில் விளைந்த
மாற்று இடம்.
தூக்கிய கைவலியும்,
புறக்கணிக்கப்பட்ட யோசனையும்,
கோபத்தை கிளறி விட்டது.
அடக்கியபடி,
அவள் சொன்ன இடத்திலே அமர்த்திவிட்டேன்.
களைப்பு தீர,
தேநீர் அருந்தி.
செடியின் கணமரியாத வெகுளி
மனதின் அறியாமையை மனைவிடம்
பரிமாறிக்கொண்டேன்.
பிரசவதின்பின் கையில்
வைக்கப்பட்ட குழந்தையை
பார்க்கும் அனுபவம் இல்லாத
புதுத் தகப்பன் போல்,
இருசெடியையும் பார்த்துகொண்டே இருந்தேன்.
அழகாய் தோன்றவில்லை.
ஆசையும் முளைக்கவில்லை.
மறுநாளில் இருந்து,
காலை எழுந்தவுடன்,
இரு மக்குகள் தண்ணீர் ஊற்றிவிடுவேன்.
செடி குடித்த நீர் போக, மீதத்தை,
அடிவழியாய் கசியவிடும்.
வழியும் நீர், ஒரு வட்ட தட்டில்
வந்து சேரும்.
நந்தியா வட்டம் பூத்துக் குலுங்கும்,
ஆனால் வாசமில்லாத பூ.
பூ என்றாலே, மணம் வீசும்
என்ற மூட நம்பிக்கையில்
ஊறி இருந்ததால்,
என்னை அது வசியம் செய்யவே
இல்லை.
ரோஜா பூவோ,
மிக்கச் சிறிய பூவாய்
பூத்து வந்தது.
நான் வாங்கிப் பார்த்த ரோஜாக்கள்
எல்லாமே பெரிய பூக்களாய்
இருக்கவே, இதுவும் எனக்கு
ஏமாற்றமாய் பட்டது.
இருத்தும்,
லேசாக மணம் வீசியதால்,
ரோஜாமீதே அதிக கவனம்
செலுத்தினேன்.
இவ்வாறு பல மாதங்கள் ஓடியது.
என் மனம் புரிந்து கொண்ட
நந்தியா வட்டம், தன் வளர்ச்சியை,
குறைத்து குறைத்து கருகி விட்டது.
ரோஜா மட்டும்,
ராஜா போல் பூத்துக்
குலுங்கிற்று.
குலுங்கும் ரோஜா செடிமீது
ஏக கரிசனம் காட்டத் துடங்கினேன்...
பால்கனியில் துருத்திக் கொண்டிருக்கும்
ஏசி பெட்டியடியில் வைத்திருந்த ரோஜா
செடிக்கு ஆபத்து வருமா?
ஒரு புறமாய் தண்ணீர் ஊற்றி
ஊற்றி, செடியில் ஒரு புறம்
பள்ளமாய் மாறி இருந்தது செடிக்கு
இடராய் இருக்குமா என்று
பார்பவர்களிடம் கேட்கலானேன்.
கடந்த சில வாரங்களாக,
தண்ணீர் ஊற்றும்போது,
என்னையும் அறியாமல்,
என் கண்கள் செடியின் ஒவ்வொரு கிளைகளையும்
நோட்டமிடுகிறது...
கை விரல்களால்
இலைகளை தொடத் தூண்டுகிறது.
தொடும்போது, சில இலைகள்
இளமையோடும், வெகு சில துலிர்கலென்றும்
உணர முடிகிறது.
பழுத்திருக்கும் சில இலைகளை
தடவிகுடுக்க சொல்லுவதாய் அறியபடுகிறேன்.
காய்ந்த சிறகுகளை உலுக்கி விட
வினவுகிரதாய் விளங்க முடிகிறது.
ஏதோ ஒரு இனம் புரியாத
உறவொன்று உதித்தை பார்க்க முடிகிறது.
வாரமொரு முறையேனும்
அருகில் சென்றமர நினைக்கிறது.
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த உலகத்தில்,
ஓசையில்லாமல் ஒரு உறவு
சாத்தியப் பட்டிருப்பது,
எனக்கு சாதனையாய்
தெரிகிறது........!