உன்னுள் கலந்திட
என்றோ ஒருநாள் பரிட்சயமில்லா முகமாய் இருந்தாய்
பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டபின் புன்னகை பூத்தாய்
பேசினாய்
பழகினாய்
கண்ணியம் காத்தாய்
இடைவெளி விட்டு விலகி நிற்பதும் நெருக்கத்தை கொடுக்குமோ?
நீ உடனில்லாத நொடிகள் யுகங்களாய் தோன்ற
நீ இல்லாத இடங்கள் வெறுமையாய் காட்சியளிக்க
நீ பேசாத மௌனங்கள் மொழியை மறக்கச் செய்ய
நான் என்னும் நிஜத்தை கடந்து
நீ என்னும் மாயைக்குள் சிக்குண்டேன்
நீ என்பதே நிஜமானால்
நான் எனை இழக்க இசைவாயா?