உயிரின் விலை
உதிரத்தை உருவாக்கி !
உள்ளத்தில் உன்னை ஏந்தி !
சோதனையை சாதனையாக்கி !
உன்னை பெற்றவளை- கேட்டுப்பார்
"உயிரின் விலை என்னவென்று"
மதிப்பும் அறியவில்லை !
மரியாதையும் தெரியவில்லை !
மமதையில் அலைகின்றாய் !
மாடுபோல திரிகின்றாய் !
அடுத்தவரின் உயிரை பறிக்க ;
அரக்கனாய் அவதரித்தாய் !
அடிவயிற்றில் இருக்கையிலே-
அறிந்திருந்தால் ;- உன் அன்னை :
அழித்திருப்பாள் அடியோடு !
ஆனந்தமாய் இருந்திருப்பாள் !
புளிதிபடிந்த மனதினிலே ;
புண்ணியமும் ஒன்றுமில்லை !
பாவமூட்டை சேர்க்கின்றாய் !
பைத்தியமாய் அலையத்தான் !