உடுமலை காதல் நாடகங்கள்

உடுமலைபேட்டையில் நடந்த கொலையை தொலைகாட்சியில் பார்க்க நேர்ந்தது .அதை பார்க்கும் போது மிகவும் பதற்றமாக இருந்தது .ஏன் இப்படி உயிரை எடுக்கும் அளவுக்கு போகிறார்கள் என்று எனக்குள்ளே கேள்விகள் எழும்பியது

கொலையுண்ட சங்கர் பொறியியல் மாணவர் .. அவர் காதலித்த பெண்ணும் பொறியியல் மாணவர் ... பெற்றோரை எதிர்த்து திருமணம் ..இதை கேட்கும் போது

எப்படி இந்த கல்வி சமூகம் இவ்வளவு முட்டாள்களை கல்லூரி வரை அனுப்பி படிக்க வைக்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது ...

தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்பதை அப்புறம் வைத்துகொள்வோம் ..
முதலில் படிக்கும் வயதில் திருமணம் தேவையா ?? அதுவும் பெற்றோரை எதிர்த்து !!!

பெண்ணை பெற்ற பெற்றோர்கள் எவ்வளவு துடித்து இருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் ..அப்படி ஒரு காதல் தேவையா ??!!!!

ஜாதி சார்ந்த பலக்கவலங்களில் இருந்து விடுபடாமல் ஜாதியை ஒழிக்க முடியாது ...உயர்ந்த சாதியினர் பலர் மாடு கறி உண்பதில்லை .தாழ்ந்த ஜாதிகளில் பலர் மாட்டுக்கறி உண்ணுகின்றனர் .. உணவு முறையே வேறுபாடு இருக்கும் பொழுது எப்படி இரு வீட்டாரும் இணைந்து செல்ல முடியும் ..!!!

தலித் இயங்கங்கள் கட்சிகள் சில கீழ்த்தரமான முழக்கங்களை முன்வைகிறது ..அது உயர் ஜாதி என்று கருதப்படும் மக்களை உசுப்புகிறது


இதெல்லாம் நிறுத்தபடவேண்டும் ...

திருமணம் என்பது இரு வீட்டார் முடிவு .பெற்றோர் முடிவே இறுதி என்று மதிக்க பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டும்

எழுதியவர் : அருண்வாலி (15-Mar-16, 6:36 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 157

மேலே