வாழ்தலா சாதலா காதல்!!

இலையுதிர்காலமடி -பெற்ற
இன்பமெல்லாம் கொல்லுதடி!
வஞ்சியுந்தன் நினைவாலே
வாழ்க்கையுந்தான் சரியுதடி!

கொஞ்சி கொஞ்சி பேசினோம்!
அஞ்சி அஞ்சி ஊர்சுற்றினோம்
நஞ்சை நஞ்சு நீதந்தாலும் தேவாமிருதமாகுடி!!

நெஞ்சுகுள்ள உன்னினைப்பு
பஞ்சு பஞ்சாய் பறக்குதடி!!
வஞ்சியுனை காணத வாட்டத்திலே
அவிஞ்சு அவிஞ்சு அழுகுதடி என்மனசு!!

காதலினால் நாம்சேரயில சாதிபார்க்கல
வீதியுலா போகயில தெருவீதி பார்க்கல
அங்குமிங்கும் சுற்றயில காசு பார்க்கல
கலுத்து தாலியொன்னு போடமட்டும் தரம்பார்க்குற!

அண்ணன் அம்மா அப்பா ஏற்கலைனு
அருகிருந்து விலக பார்க்குற
ஆம்பிளையா நானிருந்தும் அழுதுவிட
அந்நேரத்திலும் மனசில்லாம உசிர உருவி போகுற!

வேண்டியத வாங்கி போக நான்
உன் வங்கி கணக்கா?
நீ வாங்கிபோன அசல்வட்டிக்கு நான்மட்டும் பொறுப்பா?

வேலைவெட்டியை விட்டு உன்பின்னாலே வெட்டியா சுற்றி
வெட்டியாயிட்டேன் நியாயம் கேட்டு நின்னாலோ வெட்டிசாய்கிறேன்!

எந்தஊரு நியாமுன்னு எனக்கு தெரியல
தெரிஞ்சவங்க இருந்தாக்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க!!

வாழத்தானே காதலிச்சோம்!
வாழ்க்கை சாக இல்லிங்க!
சாவுத்தான் வாழ்க்கையென்றால்
பின்ன பிறப்பு ஏனுங்க! பெற்றவ மறுபிறவி எடுத்ததன் அர்த்தமென்னங்க!!?

எழுதியவர் : கனகரத்தினம் (16-Mar-16, 10:17 am)
பார்வை : 73

மேலே