மழலையின் கண்ணீர்

திரண்டு வரும் உவர்துளிகள்
வறண்டு விடும் மணித்துளியில்
செந்நிற விழும்பின் முனையில்
வெண்ணிற அருவி ஓடுகிறதோ!
மென்மையான தாமரை கன்னத்தில்
வெள்ளி முத்துகள் சிதறியதோ !
உன் கண்ணில் மட்டும் கடல் உள்ளதோ !
வான்மழை போல் நில்லாமல் பொழிகிறதோ !
கலங்கிய கண்களாலே
கலங்கமற்ற பேச்சினாலே
என்ன கேட்கிறாய் பொன்மயிலே !!!!! மழலையின் கண்ணீர்

எழுதியவர் : deepthi (16-Mar-16, 4:57 pm)
சேர்த்தது : Deepthi
Tanglish : MAZHALAIYIN kanneer
பார்வை : 84

மேலே