ஞான வாசிட்டம் - 13

மோட்ச வாயிலின் நான்கு காவலர்கள் பற்றி உரைத்த வசிட்டர் இராமனுக்கு மேலும் கூறியது:

ஆன்ம விசாரணையில்
அமிழ்ந்தி இருப்போர் மனதை
மாயை துன்புறுத்தாது..
மனம் சமநிலை வகிக்கும் !

அளப்பறியா ஆழ்கடல் ஆழமும்
மேரு மலையதனின் உயரம்
கொண்டிலங்கும் அவர்க்கு
மகிழ்ச்சி என்பது வேறல்ல
ஆன்றோர் சமாதியும்
அதனோடியைந்த
அத்தனை விஷயமும்
மட்டுமே ஆகும்!

ஒருநிலைப் படும்..
ஆன்ம விசாரணை செய்யும்
சீவன் முக்தர்க்கு மனம்
இன்பதுன்பமில்லா ..
பெருவாழ்வு வாய்க்கும்
அவர் மனம்..
நுகர்ச்சி இன்பத்தால்
நிலை இழக்காது ..
மெய்ஞானம் பெறும்!

சாது சங்கம்
சார இயலாதெனின்
நன்முறையில் ஈட்டும்
ஊதியம் கொண்டு ..
தேவைக்கு ..பசிக்கு
பொருளீட்டி
வாழ்தல் போதும் ..
ஆன்ம விசாரணை
அமைதி நிலை துரியத்தில்
நல்ல நெறிதரு நூல்கள்
படித்தல் வேண்டும்!

பாவனைகள்.. நினைவுகள்
இல்லாத துரிய நிலையில்
அமைதி கண்டவன்
சிவமயமாகிடுவான் ..
இல்லறமோ துறவறமோ
எதில் இருந்தாலும்
ஆன்ம லயத்துடனே
அவன் ..
உலகியல் மீண்டு ..
மோட்சத்தினை அடைவான் !

வீணையின் நரம்பினில்
எழுகின்ற நாதம் என
பொறுமை, ஆன்ம விசாரணை ,
நிறைவு தரு சந்தோஷ மனது,
ஞானியர் இணக்கம்
என்பன எழுப்பும்
ஆன்ம ஞானம் !

நற்குணம் எனும்
சற்குணம் வந்து சேரும்
நற்குணம்..ஆன்ம ஞானம்
அடைந்திட்ட மாமனிதர்
பிரம அடைவு கொள்வர் ..!

கீர்த்தியும் மனத்தெளிவும்
ஆயுளும், முக்தியும்
சத்தியமாய் அவர் பெறுவார் !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (18-Mar-16, 9:05 am)
பார்வை : 196

மேலே