நிழலான நிஜங்கள்
இரவில் நிலவோடு
இதயத்தில்
உன் நினைவுகளும்
ஒளிர்ந்து கொண்டிருக்கும் வேலையில்
உன் மீது நான் கொண்ட
கோபங்களெல்லாம்
கண்ணீராய் கரைந்து
என் தலையணை
நனைத்து போகிறது..........
உன்னை திட்ட தேடிய
வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய்
என் பக்கங்களை
பதம் பார்க்கிறது..........
ஓய்ந்து முடித்துவிட்ட இதயம் தேய்ந்து கிடக்கும் என் விழிகளுக்கு
உன் முகத்தை அனுப்பி
கண்களுக்குள் யுத்தம் நடத்துகிறது........
தேடி தொலைத்த உன் நினைவுகள்
ஓடி வந்து என் கனவுகளில்
ஒட்டிகொள்கிறது.......
அந்தியில் ஞாயிறு மறையும் போதே
உன் ஞாபகம் விழித்து கொள்கிறது........
உன்னை மறப்பதற்காய் நினைத்து நினைத்து நினைபதற்கு மறப்பதில்லை
ஒரு போதும்.......
தெரிந்தே களவு போகும் என் கனவுகளே தெரிந்து கொள்ளுங்கள்
இவை இனி என்றும் தித்திக்கும்
அவன் நினைவுகள் மட்டுமே...........