நடமாடும் நதிகள்-44-திருமூர்த்தி

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டால் தொப்பை குறையுமாம்.
குறைந்தபாடிலை பிள்ளையாருக்கு!

*

கிணற்றை எட்டிப்பார்க்கையில்
தடாலென வழுக்கி விழுந்தேன்
நிலாவில் !

**

இலையுதிர்ந்த மரத்தில்
பூக்களின் புன்னகை.
நட்சத்திரங்கள்..!

***

வானுக்கும மண்ணுக்குமான
வைரநெசவில் கிழிந்தோடின.
நடமாடும் நதிகள் !

****

துடுப்புகள் இருந்தும்
கரையேறுவதில்லை மீன்கள்!
வெளிநாட்டில் மக(ள்)ன்.

*****

துர்நாற்றம் பொறுக்காமல்
மூக்கைப் பொத்திக்கொண்டது
பாதாளச்சாக்கடை!

******

கூட்ட நெரிசலில் மூழ்கியிருந்த
அம்மா உணவகதிற்கு வரிசையில்
சென்றன எறும்புகள்.

*******

உடலுறவில்லாத
உணர்வுள்ள காதல்தான்
நட்பு !

********

காதலர்களை வெட்டிக்கொலை
செய்வதை படம்பிடித்தன...
மனித காமிராக்கண்கள்!

*********

தமிழகத்தை ஆள்வதற்குத்
தகுதியுள்ள ஒரேசின்னம்
நோட்டா !

**********
இப்படிக்கு,
சாதரணமா(ண)னவன்,
வெ.திருமூர்த்தி.
******((((((((((((((((((((()))))))))))))**********



கிறுக்கல்களும் கவிதையென
மறுக்காமல் தலையாட்டுகின்றன.
மரம் செடி கொடிகள் !


...நன்றிகள்...

முகப்புப்படம் வடிவமைத்த
திரு.கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பாளர்
திரு.முரளி T N
முகப்பட பெயர் பதித்தவர்
திரு.ஆண்டன் பெனி

**********(((((((((( ))))))))))**************
சமர்பணம்

ஜின்னா அண்ணாவிற்கு...

எழுதியவர் : திருமூர்த்தி (20-Mar-16, 2:19 am)
பார்வை : 341

மேலே