வலி தாங்கும் பெண்ணே
பறவையாய் இருந்தால் தாய் வீட்டில்.
உறவுகளை உதறி அடைந்தால் சிறுகூட்டில்.
புதியஇடம் அவளுக்கு புதிராக இருக்க,
தன்நிலை எண்ணி அவள் தரைமீனாய் தவிக்க.
பிள்ளைளுக்காக பல தொல்லைகளை தாங்குகிறாள்.
மெல்ல மெல்ல சாகும் தன் கனவிற்கு ஏங்குகிறாள்.
மணமானபலர் மனதை மௌனமாய் கேளுங்கள்.
பலியான வலிகதை விழிசிந்தும் பாருங்கள்.
ஆணுக்கு இணையாக வாழ
இன்னும் வழி இல்லை.
ஆதிக்கவெறியனின் அடிஉதை
மறையவில்லை.பலர்
இரத்தில் ஊறிய பித்தம்
இன்னும் குறையவில்லை.
சித்தத்தில் அதிகாரம் ஏன்என்றும் புரியவில்லை.
மொத்தத்தில் பெண்இரவு முழுமையாய்
விடியவில்லை.
அடிமை சங்கிலியும் அறவே உடையவில்லை.
திருமணதீயிலே ஆசைகளை எரித்து,
பிறர் மன தேவையை நிறைவேற உழைத்து,
அச்சத்தின் பிடியிலே மிச்ச வாழ்வை கழிக்கிறாள்.
உச்சத்தின் வேதனையை உள்ளுக்குள் மறைக்கிறாள்.
காயத்தின் தழும்பினை தாயிடம் தவிர்ப்பாள்.
இன்பமாய் காட்டி பொய் பிம்பமாய் சிரிப்பாள்.
சமையலறை காணாத ஆணில் பலர் இருக்கின்றார்.
சுமைஎன பெண்சிசுவை சுடுகாட்டில் புதைத்திடுவார்.
வேடிக்கைமனிதர் இன்னும் வாழ்கின்ற நாட்டிலே,
நாளும் ஒரு பெண் எரிப்பு வருமே தினம் ஏட்டிலே.....