பசி

சிதறாத கவனத்தைச்
சீராக நாண் ஏற்றி
சிறிதும் குறி தவறாது
எய்கிறான்..
ஏதுமறியாப்
பறவையின்
இறுதிச் சிறகடிப்பின்
ஓசை காற்றில் கலந்து
மறைந்துபோகிறது..
கொதிக்கும் குடலின்
ஒரு துளி பசி
கோரமுகம் காட்ட
அம்பறாத் துணியை
நிரப்பி இடுப்பில்
அவசரமாகச் சொருகிக்
கொள்கிறான்..
இம்முறை அதன்
வெற்றிடம்
தொலைவில்
மேய்ச்சல் நிலமொன்றில்
பசியாறப்
பாய்ந்தோடி வந்து
கொண்டிருக்கும்
ஆட்டுக் குட்டிகளால்
நிரப்பப் படலாம்...

எழுதியவர் : சிவநாதன் (20-Mar-16, 5:39 pm)
Tanglish : pasi
பார்வை : 98

மேலே