அமைதி போர்க்களம் --முஹம்மத் ஸர்பான்
விண்ணின்
தாகத்திற்கு
முகிலின் கண்ணீர்
மாந்தன் வாழும்
மண்ணில் சங்கமம்
அலைகள் கூட
பாவப்பட்டதோ?
மழையின்
தாகப் பசியை
இளைப்பாறிப் பார்க்க,
விரலின் எழுத்துக்கள்
காகிதத்தின் மச்சம்
ஜாதகம் சகுனம் என்பன
பழமையின் மிச்சம்
சிகரமான உள்ளத்தில்
பொறாமை உச்சம்
கருவால் வந்தவனும்
வெட்டியாளனுக்கு எச்சம்
தரையை
மிதித்தவனும்
நிலத்தினுள் தான்
தூங்க வேண்டும்
தேரில் வந்தவனும் நாளை
கால் வழி கட்டிலில் தான்
பூஞ்சோலை
குயில்களின்
காதலி மலர்கள்;
பறித்து சூடுகிறாள்
நடமாடும் பூங்கோதை
கண்களின் கண்ணீர்
சுயரூபம் இல்லை
உடம்பின் உதிரத்தில் தன்
பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை
நிலவும் வெள்ளை தான
பன்றியிலும் வெள்ளையுண்டு
ஆனால் நிலவு
பன்றியினை சொந்தம் கொள்ளுமா?
தொப்புள் தந்தாள் ஒருத்தி
விட்டு துரோத்தினோம் அவளை
பாட்டு பாடி வந்தால் கூத்தி
ஆடிப் பாடி பலிகொடுத்தது கத்தி
ஊரெல்லாம் தூங்குகிறது ஒன்றாய்
மயானவறை
எனும் அமைதி போர்க்களத்தில்...