உள்ளே வெளியே

பூமி சூரிய சந்திரன்
நட்சத்திரங்கள் கோள்கள்
வான்வீதி அண்டம்
கோடி சூரியக் குடும்பங்கள்
பரந்து விரிந்ததை
மனதில் நினைத்து
நம் எண்ணம் எனும்
மூளை உள்ள
மண்டைக்குள் அடக்குங்கள்

யாவும் நம்முள்
பரந்து கிடக்க
அந்த விசாலத்தை
உணர முடிகிறது

அப்படியே சற்று
கீழே வாருங்கள்
மனம் எனும் உள்ளில்
உங்களைத் தேடுங்கள்

நீங்கள்
உள்ளேயா?
வெளியேவா?

விசாலம் தெரிந்ததே
விலாசம் புரிந்ததா?

எழுதியவர் : முரளி (22-Mar-16, 9:10 am)
Tanglish : ulle veliye
பார்வை : 114

மேலே