சாதி ஆணவக் கொலைகள்
சாதி ஆணவக் கொலைகள்
என்றதோர் பேரெல்லாம்
அநாவசியம்.
அவ்வளவெல்லாம் யோசிக்காமல்,
மிருக சாதி கொலைகள்
எனச் சொல்லிவிட்டு போகலாம்,
மிருகங்கள் கோபித்து கொள்ளாமல்
இருந்தால் மட்டும்.
அரக்க சாதி கொலைகள்
எனக் கூறிவிட்டு போகலாம்
அரக்கர்கள் இது குறித்து
அசிங்க படாமல் இருந்தால்.
காட்டு மிராண்டி கொலைகள் எனலாம்
ஆதிவாசிகளும் முன்னேறி இருப்பர்
இந்நேரம்.
சாதியின் பேரைச் சொல்லி கழுத்தருப்போரே,
மிருகத்துக்கும் மிருகத்துக்கும் பிறந்தது மிருக சாதி.
மனிதத்துக்கும் மனிதத்துக்கும் பிறந்தது மனித சாதி.
மிருகத்துக்கும் மனிதத்துக்கும் பிறந்த நீங்கள்?
.