மோதி பார் நீ கூட மோடி ஆகலாம்

காணும் யாவும் மாயம்...
கண்டு தெளிந்தால் மாயும்...


வாழப் பிறந்தோம் நாம்...
வாழையடி வாழையாய் தாம்...

ஏணிப்படி போல் முன்னோர் தொடர்ச்சி...
ஏற்று நடந்தால் முழுவதும் மகிழ்ச்சி...

சூத்திரம் மறைக்கபட்டது தான்...
சூழ்ச்சிகள் விதைக்கபட்டது தான்...

உன் மண்டை ஓட்டிற்குள் முளை மக்கிபோனதோ...
சிறிதேனும் யோசி உன் முளை யோசிக்கும் ஆற்றலை முழுதும் மறந்திடாமல் இருக்க....

மாயங்கள் இல்லை மந்திரம்..
காயங்கள் இல்லை சுதந்திரம்...

மர்மங்கள் இல்லை தந்திரம்...
காலங்கள் இல்லை நேரம்...

வெற்றியின் முத்திரைகள்...

வாழ்வது கடினம் தான்,....
வாழ்க்கை வழுக்குமரம் தான்..
அதற்காய் இறந்தால் நீ முட்டாள்...
மோதி பார்... நீ கூட மோடி ஆகலாம்...

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (22-Mar-16, 1:21 pm)
பார்வை : 85

மேலே