மர்மத்தின் பக்கம்- தொடர்கதை- பாகம் 1

('மர்மத்தின் பக்கம்- தொடர்கதை- தொடக்கப் பகுதி'யின் தொடர்ச்சி)
18 நூற்றாண்டுகள் கழித்து, 20 ஆம் நூற்றாண்டில், Natural Crime Identifierஉம், அவரது குடும்பமும் சீன தேசத்திற்கு வந்தனர். Mystery Villas என்ற பங்களாவில் தங்கி, தனது ஆராய்ச்சியைத் தொடங்க நினைத்தார் Natural Crime Identifier, ஜார்ஜ். ஆனால், சூனியக்கடவுள் கூறிய அந்த நான்கு மணிகள் தாங்கள் தான் என அறியாதவர்கள் அவர்கள்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே, இருண்டு வரண்டு கிடந்தது ஒரு பூங்கா. ஜார்ஜின் மகன்கள் டேவிட்டும், ராபர்ட்டும் அங்குச் சென்று விளையாட முற்பட்டனர்.

மர்மத்தின் ஆட்டம் ஆரம்பம்.....
மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த ராபர்ட், தனது தந்தையைப் போன்ற நுண்ணறிவும், ஆன்மிகக் குணமும் வாய்ந்தவன். அப்பூங்காவில் தங்கள் குடும்பத்திற்கு ஏதோ தீங்கு ஏற்பட இருப்பதை உணர்ந்தான்.
உடனடியாக அவ்விடத்தை விட்டுச் செல்ல முன்வந்தபோது, டேவிட், ஓர் பழமையான செப்புத்தகடில் எழுதப்ப்ட்டிருந்த மந்திரத்தைப் படித்தான். அம்மந்திரம், சூனியக்காரி சொன்ன அதே மந்திரம் தான். அதைச் சொன்னஉடன், அவ்விடம் கார்மேகத்தால் மூடப்பட்டு, இலைகள் பரந்து, எங்கும் சிவப்பாகிவிட்டது.

டம் டம் டம்......
கெட்ட அபாய ஒலி....
சூனியக்காரி விடுதலை செய்யப்பட்டாள். இனி உலகத்தின் கதி அதோகதிதான். டேவிட்டுக்குள் சூனியக்காரி புகுந்து விட்டாள்.

உலகம் மாட்டிக்கொண்டது.....

அடுத்த பாகம் விரைவில்.......

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (22-Mar-16, 9:05 pm)
பார்வை : 380

மேலே