பிரிவு

பிரிவு

அவள் என் மேல்
அளவில்லா சினம் கொள்கிறாள்,
அதிகமாக சண்டையிடுகிறாள் என்று
"பிரிந்துவிடுவோம்" என்றேன்.
இத்தனை நாளாக சண்டையிட்டவள்
இன்று ஏனோ அடக்க முடியா
அழுகையுடன் சென்றாள்.
நான் அவளிடம் அளித்த
சொற்கள் நினைவிற்கு வந்தன.
உன்னை எந்த நிலையிலேயும்
பிரியமாட்டேன்.
இவ்வளவு நாளாக போலியான
அன்புடன் தான் பழகியிருந்தேனா அவளிடம்.
இப்பொழுது அவளது எண்ணுக்கு
அழைத்துச் சொன்னேன்
"பிரிந்துவிடுவாயா" என்று.
பதில் சொல்லாத மெளனத்துடன்
பத்து நிமிடம் கழித்து
என் அருகே வந்தாள்,
என்னுடன் கை கோர்த்துக்கொண்டே மீண்டும்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாள்
சண்டையைப் பிரிய மனமில்லாதவனாய் நான்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (23-Mar-16, 8:54 pm)
Tanglish : pirivu
பார்வை : 145

மேலே