அழகின் இரகசியம்
அழகு இயற்கை
அதை நாம் தக்க வைக்க நினைத்தால்
தானாகவே நம் அழகு குறைந்து விடும்
அழகு ஒருவரின் இயற்கை வரம்
நம் மனமே நம் அழகு
அது தன்னாலே வரும் போது
அழகு வர்ணிக்க இயலாது
அதைப் பற்றி நாம் சிந்தித்து
சேமிக்க நினைக்கும் போது
அதன் பொலிவு குன்றிக் கொண்டே செல்லும்
ஏன் நாம் அதை மிளிர விடாமல்
இன்னும் இன்னும் வேண்டும்
என்று ஆசைப் படுகின்றோம்,
ஆசை என்பது கொடிய விஷம் போல
அது நம் இயற்கை அழகை
இல்லாத ஒப்பனைகள் மூலம்
இருந்த இடம் தெரியாமல்
அழித்து விடுகிறது,
மீண்டும் திரும்பா இவ்வழகு
இருக்கும் அழகு போதும் என நினைத்தால்
அழகின் வனப்பும் வசீகரமும்
அடுத்தவர் பார்வையில் ஏங்க வைக்கும்
ஆசை வைக்கும்
அதுவே உண்மையின் அழகு
நாம் அழகு என்று நினைத்தாலே போதும்
உங்கள் அழகு உங்களையே சொக்க வைக்கும்