காதல் ஏக்கம்

உன் குரல் கேட்க துடிக்கிறேன்
என் செவி எட்டும் தொலைவில் நீ இல்லை என தெரிந்தும்
உன் தரிசனம் வேண்டி நிற்கிறேன்
என் பார்வை படும் தொலைவில் நீ இல்லை என தெரிந்தும்
உன் ஸ்பரிசம் உணர ஏங்குகிறேன்
என் உடலோடு உன் உடல் உராயும் தொலைவில் நீ இல்லை என தெரிந்தும்
உன் அன்பை நாடுகிறேன்……….
உன்னை கட்டி அணைக்க ஏங்குகிறேன்
என்னசெய்ய எனக்கு தெரிந்தது என் மனதிற்கு தெரிவது இல்லையே ...........

எழுதியவர் : மணி வேல் (24-Mar-16, 10:59 pm)
பார்வை : 187

மேலே