காதல் இனிப்பது இளமையிலே --- தரவு கொச்சகக் கலிப்பா

காதலினால் இனிப்பதுவோ காலங்கள் சொல்லிடுமே .
ஆதலினால் காதலினை அனைவருமே செய்திடுக .
மோதலற்ற முழுமையான மோகத்தினால் இளமையிலே
சாதலின்றி சாதிக்கக் சகலமுமாய் வந்திடுவீர் .


வாழ்தலினை வேண்டியுமே வகையானக் காதலினை
ஆழ்ந்திருந்து நினைவதனால் ஆழமான நிறைந்திடவும்
வீழ்தலின்றிக் காத்தலுமே விண்தொடவும் எட்டிவிடும்
சூழ்ந்திருக்கும் இளமையிலே சுகமாகக் காதலிப்பீர் .


இளமையிலே காதலது இனிக்கின்ற தேனாகும்
வளமையுடன் நன்னெறிகள் வாய்த்திடும் வேளைக்குத்
தளராதுக் காதலிப்பீர் தக்கதொரு காலந்தன்னில் .
உளமோடு நேசிக்கும் உன்னதமே காதலாகும் .


இனிக்கின்ற கரும்பினது இனிமையினைச் சொல்லிடுமே .
கனிபோலக் கன்னிமனம் காதலோடு சேர்ந்திடுமே .
இனிப்பானச் செய்தியிது இளமையிலே யாவர்க்கும்
பனிபோன்ற வெண்மேகம் பரவசமாய் நல்கிடுமே .


முதுமையிலே காதலது முடிந்துவிட்டக் காதலன்றோ
எதுவந்த போதினிலும் ஏற்றமில்லை காதலிலே .
அதுவல்ல இனிப்பென்று அனைவருமே உணர்ந்திடுவர் .
மதுபோன்ற மங்கையவள் மயக்கத்தை தருவதுண்டோ .


எப்படிநாம் பார்க்கையிலும் ஏற்றமிகுக் காதலொண்டு
தப்பான உறவுவிடுத்த தரமானக் காதலினை
முப்பாலும் சொல்லிவைத்த முத்தாய்ப்பு இளமையிலே
இப்பாரில் இக்காதல் இனித்திடுமே இளமையிலே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Mar-16, 11:10 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 57

மேலே