ஏழையின் பசியாற்று

படம் பார்த்து கவிதை

ஏழையின் பசியாற்று..!
=====================

உமிழ்நீரும் சுரக்கின்ற அறுசுவை உணவு
அள்ளியே தின்றிட ஏங்கிடும் மனது
அடங்கிடு.. அடங்கிடு வந்திடும் கேடு
அசரீரி ஒலிப்பிலே அடங்குதே கூடு..!!

நாவிற்கு சுவையென்று நாலுவகை உணவு
உண்டு நித்தம் களித்திட ஆரோக்கியம் கனவு
பசியடங்கப் போது(ம்)மட்டும் உண்டு நீ பழகு
நசிந்திடும் பிணிகளும் உடல் கூட்டும் அழகு..!!

விதவித உணவுகள் விழாக்களில் நித்தம்
வீணாக்கி போகிறார் விழிவழி இரத்தம்
திமிறி நிற்கும் பெருஞ்செல்வம் வீணாகலாமோ
பதறிடும் பசியோர்க்கு பசியாற்றலாமே..!!

எழுதியவர் : சொ.சாந்தி (27-Mar-16, 3:14 pm)
பார்வை : 205

மேலே