இயற்கை

வறண்ட பூமியை
வளமாக்கிடு

தேர்ந்த விதையை
தேடி விதைத்திடு

செயற்கை உரங்களை
தவிர்த்துவிடு

இயற்கை உரங்களை
தூவி விதையினை
வளர்த்திடு

துளி நீரையும்
வீணாக்காமல்
விதை துளிர்த்திட
சேர்த்திடு

பயிர் வளத்தை
பாதுகாத்து
பசிப்பிணியை
போக்கிடு

எழுதியவர் : கவியாருமுகம் (27-Mar-16, 5:22 pm)
Tanglish : iyarkai
பார்வை : 180

மேலே