முகவரி தேடி

நாங்கள் -
நாளைய உலகின்
நம்பிக்கை
நட்சத்திரங்களாய்
நடமாடிய
பட்டாம்பூச்சிகள்...!

பிரச்சனைகளின்
பிரதிநிதிகளாய்...!
பிற்போக்கு
எண்ணங்களின்
பெரும் எதிரிகளாய்...!
உள்ளத்தின்
உணர்ச்சிகட்கு
கட்டுப்பட்டவர்களாய்...!
அதனால்
உலகப் பார்வைக்கு வெட்டுப்பட்டவர்களாய்...!

போராட்டக் காயங்களுக்கு
கனவு ஒத்தடமளிக்கும்
நேசக்கரங்களாய்...!
எழில் காணும்
பிரியர்களாய்...!
எதிலும் -
வெறியர்களாய் அல்லாத...
நிழலுக்கு உருவமிடும் ஓவியர்களாய்...!
எந்த -
நிஜங்களுக்கும்
அஞ்சா அடிமைகளாய்...!
கடித்துக் கொள்ளும்
காதற்பாம்புகளாய்...!
எனினும் -
கதிர் குறையா
விளக்குகளாய்...!
இடிதாங்கும்
இதயங்களாய்...!
ஆனால்
இரக்கத்தில் இமை
ஆறுகளாய்...!

ஒருவனைக்காண
ஊரையே ...
உலாவர வைக்கும்
நாங்கள்...!
சலசலபுகளுக்கு
அஞ்சியதுமில்லை...
சரிவுகளின் மேல்
சாய்ந்ததுமில்லை...

எமக்குள் -
வசப்படமறுக்கும்
வார்த்தையுளிகள்
கொண்டு ...
ஒரேயொரு -
வாக்கிய சிற்பத்தை
வடித்துவிட வேண்டுமென்ற
வற்றாத ஆசை நதிகலென
வலம் வந்த நாட்கள்...
நமக்குயென்ன
நலமில்லா நாட்களா..
நண்பர்களே...!

அந்த
கருவேலங் காடுகளை
கடந்து...
நடந்து நடந்து
கால் நைந்த போதிலும்
காய மேற்பட்டதில்லையே
எனினும்
வடுக்களை யல்லவா
வருடிப் பார்க்கிறது
இந்த
வாழ்க்கை விரல்கள்...!

நமது வாழ்வை
விரிவரியாய்
வாசித்து சுவைத்த
வசந்த மண்டபமும்...!

இதுவொரு
பொன்மாலைப்
பொழுது யென
ஒவ்வொரு அந்தியிலும்
முகவரி தந்த ஏரியும்...!

யார் வந்தாலும்
வராவிட்டாலும்
தான் மட்டும்
நின்றுபோகும்
புகைவண்டித் தொடரின்
புகலிடமான
ரயில் நிலையமும்...!

பனியில் நனைந்து
பௌர்ணமி ஏந்திய
பருவ நினைவுகள்
முகவரி தேடிட
முனைந்த பொழுதில்...

எழுதியவர் : இராக. உதயசூரியன். (27-Mar-16, 9:56 pm)
Tanglish : mugavari thedi
பார்வை : 141

மேலே