தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 1 9 - = 51
“மலரே...! உன் பாதம் வலிக்கின்றதா...?
பூ மெத்தை அமைத்திடவா ?
நிலவில்லாத இரவைப்போல்
நானிருந்தேன் தனிமையில்
ஒளி கொடுக்க வந்த நீ
என் வீட்டு குல மயில் !”
“உறவே..! என் பாதம் வலிக்கலயே...!
ஏனெனில் நீ என்னருகில் இருக்கிறாயே !
துடுப்பில்லாத ஓடம் போல்
தவித்த வந்த ஜீவன் நான்
தோல் கொடுக்க வந்த நீ
நான் வணங்கும் தேவன்தான் !”
வானில் ஓடும் கார்முகில் போலே
என் நெஞ்சிலாடும் மலர் கொடி நீயே
வாசமலர்கள் வண்டைக்கண்டு
மயங்குதுப்போல் மயங்குகின்றேனே..!
செய்நன்றி மறவாத பெண் நான்
உன் நெஞ்சை களவாடும் கள்ளிதான்
ஊழ்வினை என்னை உன்னிடம்
சேர்த்தது நான் செய்த பாக்கியம் !
மயிர் உதிர்ந்தால் மாயத்துடிக்கும் மான்
மானைப்போல மானமுள்ளவர்கள் யார் ?
மரக்கிளைகளில் கூடுக்கட்டும் தேன்
மனிதர்கள் கைப்பட்டாலே கொட்டுவது ஏன் ?
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கொள்கை உண்டு
அதன் விதிமுறைப்படியே அவை நடக்கின்றது
அத்துமீறீ நடப்பவையெல்லாம்...
பேராபத்தை எதிர் கொள்கின்றது..!