தூங்கா விழிகள்
தூங்கா விழிகள் வேண்டினேன்
உன்னை ஒரு நொடி கூட
பிரிய மனமில்லை!!!
முடியா நாட்கள் கேட்டேன்
நீ பேசும் அழகை காண
நேரம் போதவில்லை!!!
விடியா இரவை விரும்பினேன்
உன் உறங்கும் விழிகள் கண்டு
இரவு விடியவில்லை !!!
பாதையில்லா வழி தேடினேன்
உன் கைப்பிடித்து நடக்கும் தருணம்
முடிவுபெற விருப்பமில்லை!!!
நீயில்லா வாழ்க்கைக் கொண்டேன்
உன் துணை இல்லாமல் வாழும்
வாழ்க்கையில் உயிரில்லை!!