சமையலறை

அம்மாவின் சமையலறை
சாணமிட்டு மொழுகி
அரிசி மாவு
கோலத்தில்
அழகாய் மின்னும்
அடுப்பின் ஓரத்தில்
குட்டிப்போட்ட பூனைக்குட்டி
இதமாய் ஓய்வெடுக்கும்
காய்ச்சல் வந்தால்
ரசமே மருந்தாகும்
கருப்பட்டியோடு
சுக்கை தட்டிப்போட்டு
அம்மா தரும் சுக்கு காபி
இதமாய் நெஞ்சுக்குள் இறங்கும்
உளுந்தங்கலியும்
கம்மங்கூழும்
கேப்பரொட்டியும்
விரதம் இருப்பவரையும்
சரணடையச்செய்யும்
அம்மாவின் சமையலறையில்
இருப்பதே நான்கு டப்பாக்கள்
அதில் அன்பையும் சேர்த்து
அறுசுவை கலந்திருக்கும்.

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (27-Mar-16, 5:57 pm)
Tanglish : samayalarai
பார்வை : 205

மேலே