வெயிலோடு விளையாடு

வெயில்
இது சூரியனின் சொத்து
சூரியன் இருக்கும் வரை நமக்கு கொடுக்கும் மொத்து
கோடையில் போட்டு வதைக்கு இதுதான்
குளிரில் அடித்தால் இதமாய் இருக்கும்..

காலைவெயில் எழும்புக்கு நல்லது
காலையில் எழுவது உடம்புக்கு நல்லது
மாலைவெயில் மகிழ்வைக் கொடுக்கும்
மதியவெயில் புரட்டி எடுக்கும்

வெயிலிருந்து தப்பிக்க நிழல் வேண்டும்
நிழலை இலவசமாய் பெற‌ மரம் வேண்டும்
வெயிலை பலிப்பதற்கு முன்
முடிந்தால் சில மரம் நடுவோம்
முடியவில்லை என்றால் இருக்கும் மரங்களை வளரவிடுவோம்

வெயிலும் மழைச்சாரலும் சேர வானவில் உருவாகும்
அதுவே பல கலைஞர்களின் கவிதைக்கு கருவாகும்
வெயிலிலிருந்து நம்மை காப்பது சாலையோரத் தருவாகும்
எனவே மரங்களை வளர்ப்போம்! வெயிலைப் போற்றுவோம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Mar-16, 6:38 am)
Tanglish : veyilodu vilaiyaadu
பார்வை : 1479

மேலே