வருத்தங்களோடு ஒரு உழைப்பாளி பேசுகின்றேன்

வருத்தங்களோடு ஒரு உழைப்பாளி பேசுகின்றேன்!
###############################################
☻ நீங்கள்
பரிதாபப்பட்டு வீசுகின்ற
பிரியாணியை விட - எங்கள்
வியர்வையில் தோன்றிய
சோத்துக்கஞ்சிக்கு...
சுவை அதிகம்தான்!
☻ஆகவே
தயவுசெய்து எதையும்
தானமாய் தராதீர்கள்!
தன்மானத்தோடு வாழுகிறோம்!
☻இன்று எந்த
முதலாளிகளும்
அட்சயப்பாத்திரத்தை..
அனுப்பவேண்டாம்!
☻எங்கள்
வியர்வைக்கு யாரும்..
விழா எடுக்க வேண்டாம்!
☻மூட்டை சுமந்து சுமந்து
இந்திய ஜனநாயகத்தைவிட
கூனிப்போய்விட்ட எங்கள்...
முதுகுக்கு யாரும்
முத்தம் கொடுக்க வேண்டாம்!
☻வெயிலில் கறுத்து
புண்பட்ட தோலுக்கு...
பொன்னாடை வீச வேண்டாம்!
நீங்கள்
உடுத்து கிழித்த வேட்டியை...
போனஸ் எனச்சொல்லி
பிச்சையிடவும் வேண்டாம்!
☻எதுவுமே வேண்டாம்
ஒரே ஒரு
வேண்டுகோள்!
☻தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!"
.................................................................. R@$@Y........

எழுதியவர் : படித்ததில் உறுத்தியது (30-Mar-16, 9:30 am)
பார்வை : 719

சிறந்த கட்டுரைகள்

மேலே