இதயம் போதும்
போர்வை என்னும் வீடே போதும்
போர்க்களத்திலும் வாழ்வோம் நாளும்(நாங்கள்...)
வேறு வேறு எண்ணம்...
வேறு வேறு குணம்...
ஆனால் வேறு வேறு இல்லை நாங்கள்...
மொழிகள் வேண்டாம்
கண்கள் போதும்...
வார்த்தை வேண்டாம்
வருடல் போதும்...
இணைய(ம்) வேண்டாம்
இதயம் போதும்
நெஞ்சம் என்னும்
கூட்டுக்குள்ளே
நேரம் காலம்
தேவையில்லை
நாங்கள் பார்க்க...
கடவுச்சொல் கடத்தப்பட்டால்
ரகசியம் ஏது...
நெஞ்சில் ஆக்கிரமிப்புகள் தந்துவிட்டால்
இடம் ஏது...
நெஞ்சில் வலி கூடும்...
(ஆனாலும் )அதில் சுகம் வாழும்...
இதய தாயத்தில்
தாயம்
நீ மட்டும்...
இதய தாயகத்தின்
பிரஜை
நீ மட்டும்...
கன்னியவள் கண்களின்
கண்ணியில் காணாமல்
போனவன் நானடி...
எந்தன் அகம் நீ
எந்தன் யுகம் நீ...
எப்பொழுதும் எனை காட்டிக் (விட்டு) கொடுக்கா
என் கள்வன் நீ...
மாலை வேளை
மரகத மஞ்சள்
நாளை காலை
பனி விழும் தளங்கள்
வேண்டும் யாவும்...
கனவாய்...
நனவாய்...
பணவீக்கம் கடனாளியை ஒன்றும் செய்யா.....
உன் பாசவீக்கம் ஒருவேளை நிகழ்ந்தால்
எனை ஏங்கவைத்து எப்பொழுதும் வாழ செய்யா...