யாதுமாகி நின்றாள்

கர்பத்தில் ஆரம்பிக்கும் கலவரம் ,
ஆணா பெண்ணா என்ற நிலவரம்.
பெண்ணென்றால் பேரின்பம் சிலருக்கு ,
பெருங்கவலை பலருக்கு .

பொம்மைகள் மொழி அறியும் முன்னே,
புத்தகங்கள் மொழி அறிய அவசியம்.
பால் புட்டியோடு, பாடங்கள் புகட்டும்
பள்ளிகள் ஒரு அதிசயம்.

பெண்களைப் பள்ளியில் சிறைவைத்தோம்,
மதிபெண்ணுக்கு, அவளை இரை
வைத்தோம்.
மனப்பாடம் செய்தே மழுங்கிவிட்டாள்,
சுயமாய் எங்கே சிந்திதாள் ?

மதிப்பெண் வேர்க்கை, மாணவர் சேர்க்கை,
என்றே இருந்துவிட்டனர், ஒழுக்கத்தை
எங்கே போதித்தனர் ? ஆணுக்கும்
கற்பு உண்டு மறந்து விட்டனர்.

ஆணின் கற்பு நிலைத்திருந்தால்,
பெற்றோர் நிம்மதி பெற்றிருப்பர்.
பெண்களின் முகம் சிவக்குது ஆசிட்டில்,
வன்முறை நடக்குது நடுரோட்டில்.

கருபென்றும் ,வெளுப்பென்றும்,
பிரிக்கும் ஓர் கல்யாணச்சந்தை,
பெண்ணும் கொடுத்து , பொண்ணும்
கொடுப்பர் என்ன ஒரு விந்தை.

கொடியை காட்டி கொள்ளையடிக்கும்
ஒரு கூட்டம், விலை வாசி தொட்டது
உச்சகட்டம், செலவு கணக்குப் பார்த்தே,
கலங்கும் பெண்கள் பாடு திண்டாட்டம்.

இத்தனை கடந்தும் பெண் எங்கே வாழ்ந்தாள்?
வாழவைக்கப்பட்டாள் . வாழ்வது சுதந்திரம்,
வாழவைக்கப்படுவது, ஆண்களின் தந்திரம்.
யாதுமாகி நின்றவள் வாழ்வது எப்போது ?

எழுதியவர் : vanikumar (31-Mar-16, 10:22 pm)
Tanglish : yathumaagi nintraal
பார்வை : 343

மேலே