திரு ரமணன் அவர்களுக்கு பணிநிறைவுக் கவி
வான மழை பொய்த்ததுண்டு
உன் ஞான மழை பொய்த்ததில்லை
வருணன் வரும்முன்
காப்பதற்காக எடுக்கப்பட்ட
அவதாரம் ரமணன்
பல கண்களைகொண்டு பார்த்த
இராவணன் அல்ல நீ
பல கணினிகளைக்கொண்டு
காத்த ரமணன்
நீ சொல்லும்போது
மழை வாய்க்கின்றதோ
இல்லையோ மலர்ச்சியாய்
பிள்ளைகளுக்கு விடுமுறை
வாய்க்கின்றது மகிழ்ச்சியாய்
உன் முன் எச்சரிக்கை
செயல் கண்டு
தானே புயல் கூட
தானே அஞ்சியது
உன் துல்லியத்தின்
முகம்கண்டு
மேகம் கூட
உன்னைக் கொஞ்சியது
இனி யார் தருவார்
நாற்பத்திஎட்டு மணிநேரம் கெடு
அரசே அவருக்கு
பணியாற்ற இன்னும்
ஒரு வாய்ப்பைக் கொடு
வரும் முன் காத்தவனே
புயல் மழையில்
உதிராது பூத்தவனே
உன் சிறந்த பணிக்கு
என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்