மித்ரா - நேத்ரா

மித்ரா - நேத்ரா


அண்ணெ உங்களுக்கு ரண்டும் பெண் கொழந்தைகளங்காப் பொறந்திருக்குது. ரொம்ப சந்தோசம். தற்காலத் தமிழர் பண்பாட்டைப் பின்பற்றி ரண்டு கொழந்தைகளுக்கும் இந்திப் பேருங்களத்தானே வச்சிருக்கீங்க.
==
ஆமாண்டா தம்பி. சினிமா வந்த நாள்ல இருந்தே நம்ம பரம்பரையே தீவிர சினிமா ரசனை உள்ள பரம்பரை. அந்த வழக்கப்படி மூத்த பொண்ணுக்கு மித்ரா –ன்னும் இளைய பொண்ணுக்கு நேத்ரா –ன்னும் பேரு வச்சிருக்கோம்.

==
அழகான இந்திப் பேருங்கண்ணே. அந்தப் பேருங்களுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமுங்களா?
==
அட இந்திப் பேருங்களப் நம்ம பிள்ளைங்களுக்கு வைக்கறது தான் தமிழ் பண்பாடு, பேருங்களின் அர்த்தத்தைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி பண்ணறது முட்டாள்தனந்தாண்டா தம்பி.
==
நீங்க சொல்லறது சரி தான் அண்ணே. ஏதோ ஆர்வக் கோளாறுலெ கேட்டுட்டேன். என்ன மன்னிச்சிருங்க அண்ணே.
==
அதுக்கென்னடா தம்பி பரவால்லடா.
==
ரொம்ப நன்றி அண்ணே.
=============================================================
Netra = ನೇತ್ರಾ; নেত্রা; ਨੇਤ੍ਰਾ; నేత్రా; നേത്രാ; નેત્રા; நேத்ரா == Eye கண்
Mithra = ਮਿਤ੍ਰਾ; મિત્રા; ; మిత్రా; ಮಿತ್ರಾ; মিত্রা; മിത്രാ; மித்ரா = Friend (Girl) தோழி
Alliance, Binding (Boy) – இணைப்பு, பிணைப்பு நன்றி: இண்டியாசைல்ட்நேம்ஸ்காம்
=========================================================================
சிந்திக்க. மொழிப் பற்றையும் மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்க. பிற மொழிப் பெயர்களை அறிய.

எழுதியவர் : மலர் (1-Apr-16, 3:01 pm)
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே