எப்போதும்

கரங்கள் வந்து தடுத்த போதும்
காவிய மிடை மறித்த போதும்,
கயவர் நெஞ்சம் மிகுந்த போதும்
கடவுளே வந்து தடுத்த போதும்,
பாவம் வந்து சூழ்ந்த போதும்
பழிகள் வந்து சேர்ந்த போதும்,
சுற்றம் நின்று மறித்த போதும்
சூழ்ச்சி வந்து தடுத்த போதும்,
பண நலத்தை துறந்த போதும்
படை பலத்தை பிரிந்த போதும்,
சாத்திர மிடை மறித்த போதும்
சங்கட மேலும் வந்த போதும்,
"நீ நீயாக இரு"ந்தால் போதும் நீ
மனிதனாக வாழ யெப் போதும்.