மூச்சிழந்தாலும் --முஹம்மத் ஸர்பான்
உன்னைக் கண்ட நிமிடத்தில்
எந்தன் வாழ்க்கை தொலைந்தது
உன்னிடத்தில் எந்தன் மூச்சை
நானும் கொடுக்க நினைக்கிறேன்.
பேசாமல் வார்த்தை திருடி
பார்க்காமல் விழிகள் திருடி
விழிகளில் கண்ணீர் தந்து
எந்தன் மனதை களவாடினாள்
நீ செல்லும் சாலையில்
நான் நடந்தால் குற்றமா
அவ்வாறு இல்லையெனில் என்னை
கண்டு ஏன் முகம் சுளிக்கின்றாய்.
உன்னோடு நான் வந்து
நீ அழுதால் என் மனம் தாங்குமா
என்னை பிடிக்கா விட்டால் என்
முகத்தில் உரிமையோடு
ரெண்டடி அடிச்சிக்கோ...........,
ராத்திரியில் என் ஜன்னல்
நிலவும் பார்க்க தயங்குது
ஏனென்றால் என் மனசில்
நீ என்றென்றும் வாழ்வதால்
உனக்கு நானென்று கடவுள்
எழுதினால்..,நம் மூச்சு
நின்றாலும்.,சுவனத்தில் உன்
கழுத்தில் மூன்று முடிச்சி இடுவனே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
