தவறை உணர்ந்த தலைமுறை…

அப்பன் செய்த செயலதுதான்
அங்கே மரத்தை வெட்டிவிட்டான்,
தப்பென தந்தையர் அறியவில்லை
தாவரம் அழிப்பதைக் குறைக்கவில்லை,
இப்படிப் போனால் சிலகாலம்
இப்பார் முழுதும் பாலையாகும்,
தப்பெனத் தெரிந்த தனையரெல்லாம்
தாமே வந்தார் மரம்நடவே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Apr-16, 6:12 pm)
பார்வை : 175

மேலே