சூழ்நிலைக்கேற்ற பாடல்-2

..............................................................................................................................................................................................

(சூழ்நிலை சொல்லத் தேவையில்லை..)

ஓய் சிந்தாரி கப்பக்கிழங்கே,, தூள் படப் பாடல் மெட்டு...

.................................................................................................................................................................................................

ஓய்..... ரோடு ஜொலிச்சிருக்கே...
ஓ... லோனு கிடைச்சிருக்கே...
ஹே.. ஓநாய் அழுதிருக்கே..

ஏய்.. கூத்து கெளம்பிடுச்சே..
ஹேய்.. தேர்தல் நெருங்கிடுச்சே...
ஓ... மண்டை குழம்பிடுச்சே...

தய்ய தக்கா தய்ய தக்கா தய்ய தக்கா தை...
தாவுறதும் மோதுறதும் கச்சிதமா செய்...!

ஏப்ரல் ஒண்ணு “மே”க்கு போச்சு..
என்னென்னவோ நடந்து போச்சு..
கூட்டிக் கழிச்சி பார்க்கும்போது
இளிச்சவாயன் எளைச்சவன்தான்...

புதுசு புதுசு பணக்காரன் புறப்பட போறான்...

இது தலையெழுத்தா..? ஊரின்
கொலையெழுத்தா..?- உங்க

கோவணத்தை பத்திரமா பாத்துக்கோங்கடா...( தய்ய தக்கா..)

நேத்து வரை லோக்கல் தாதா
நாளை முதல் மாண்புமிகு..
வேதியியல் மாற்றம் கூட
வேட்டி முன்னே தோற்குதடா..

குறுக்கெழுத்தும் நெடுக்கெழுத்தும் கூட்டு சேருது..

பகல்கொள்ளையடா.. தண்டனை இல்லையடா – இந்த
பாவத்துக்கு ஜனநாயகம் வேறு பேரடா...! ...( தய்ய தக்கா..)

எழுதியவர் : அருணை ஜெயசீலி (2-Apr-16, 9:16 pm)
பார்வை : 80

மேலே