இது கவிதையல்ல அன்னை இழந்த சிறுவனின் -- கண்ணீர்

சிறு வயதில் அன்னையும்
தம்பியை அடிக்காமல் பார்த்துக்கொள்
என்று அன்பாக ஊட்டிவிட்டாள்
ம் .. எனக்கு பிடித்த சர்க்கரையை தொட்டு அந்த பொங்களை
அன்றே என் அன்னை முதல் முறை அன்பாக பேசியது
என்றும் காணாத அன்பு
திருட்டு தனமாக சர்க்கரையை அள்ளி வாயில் போட்டுகொண்டாலே
ஜல்லிகரண்டி தேக்கத்தில் படியும் அளவிற்க்கு
விழும் அக்கறையின் அடையாளம்
தன் உடல் கொண்ட நோயின் காரணமாக
பிள்ளைகளிடமும் பேசிடாத அவள் குரல்
பல நாளாய் நினைவு கொள்ள முயற்சித்தும்
கேட்க்காமல் தான் இருக்கு
தேர்வு தாள்களை மட்டும் வாங்கி பார்த்து
நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால்
ஓங்கும் கரங்கள் அன்புக்காட்ட மறுத்ததாலே
தந்தையின் அன்பு பெரியது என்று எண்ணினேன்
அன்னை உன் அன்பு பெரியது என்று காட்ட மரணத்திலா காட்டுவாய்
தற்க்கொலை கோழைத்தனம் என்று என்றே என் தந்தை சொல்வார்
அவரின் கருத்து பொய்யாக போனது
இன்றே அதற்கான வீரம் வேற எதிலுமில்லை என்பதை உணர்கிறேன்
குடும்பத்தின் வறுமை நோயை அற்றவில்லை என்று
குத்துவிளக்காகிய உன் உயிரை அனைத்துகொண்டாய தீக்கு
18-09-2000 இரண்டாயிரத்தில் உலகம் அழிய போகிறது என்றார்கள் அல்லவா
என் வாழ்வில் அது உன் உண்மையில் அழிந்து போனது அன்னை உன்னோடு
அன்றே அறிவியல் தேர்வு 'ஒழுங்கா எழுதணும்' என்று சொல்லவாய் என்றே எண்ணம் கொண்டேன்
இல்லை புதிதாக அன்புகாட்டி என் வாழ்நாள் சோகத்தை தந்துவிட்டு போவாய் என்று அறியாமல்
தேர்வறையில் காரணமற்ற வலி உடல் நரம்புகள் தீ பிடிச்சு எரிந்ததன் காரணம் புரியவில்லை
அதிகமாக வேர்வை தொண்டைக்குள் மூச்சு அடைத்துக்கொண்டு
ஒரு சித்திரவதை அனுபவித்தேன் உனக்கு புரியுமா அம்மா
ஏதோ நிகழ்கிறது என்பது புரிந்தாலும் என்னவென்றே தெரியாத நிலை தான்
தேர்வை முடித்துவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தேன் நீ இல்லை
சுவர்களில் சில தடையங்கள் ஏதோ சதையும் துணியும் எரிந்த மாதிரி ஒரு கறை கண்டேன்
இருந்தும் நம்பினேன் எதுவுமிருக்காது இருக்கவும் கூடாது
என்று கடவுளிடம் அன்று இரவெலாம் கூட வேண்டினேன்
இஸ்டம் தெய்வமாகிய விநாயகரை கிணற்றில் போடாமல்
வீட்டில் வைத்திருந்தார்கள் அவரிடம் வேண்டினேன்
அது மண் சிலை என்றும் அறியாமல்
இதுவரை நீ எங்கு சென்றாய் என்று யாரும் சொல்லவில்லை
நாளை உன்னை பார்ப்பேன் என்ற நம்பிக்கையை விதைத்துகொண்டு
கண்ணீரோடு படுத்துக்கொண்டேன் காரணம் இல்லாமல் காலை உறவினர்கள்
வீடு முழுவதும் நிறைந்திருப்பது கூட தெரியாமல்
அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு தவிக்க வைத்தார்கள்
பயம் கண்களில் வெளிவந்ததையும் மறைத்துக்கொண்டேன்
அன்னை நீ வருவாய் என்ற நம்பிக்கையிலே
ஒரு வெள்ளை மூட்டைக்குள்ளே ஏதோ வந்தது
சிலர் வேண்டாம் என்றார்கள் சிலர் பார்க்கட்டும் என்றார்கள்
இதோ இந்த தருணமும் கண்களில் கண்ணீர் ஒடுகிறது
அன்று சீந்திய கண்ணீரை எண்ணி
அன்னை உன் முகம் வதங்கிய மலராக இருந்தது ( வலி )
கண்களில் இருள் வெள்ளம் பரவியது
என்னை பிணமாகவே நான் உணர்ந்தேன்
உடலின் நிலை அறியேன்
வானத்தில் என்னுயிர் உன்னிடம் தான் பேசிக்கொண்டிருக்கு
அம்மா அம்மா வேன்று பதில் தா
இல்லாத பதிலாலும் உன்னை பழித்த பாவத்தாலும்
தீயை வெறுக்கிறேன் கண்ணீரை விரும்புகிறேன் தனிமையில் புலம்புகிறேன்
பிறப்பை வெறுக்கிறேன் மரணத்தை வேண்டுகிறேன்
வலியாக உணர்வது தீ காயங்களையே
வெளிச்சம் தரும் தீ தானே என் வாழ்க்கையை இருளாகியது
இருந்தும் அவர்கள் என்னை விடவில்லை
அணைந்த தீபத்தை எரிக்க சொன்னார்கள்
உலகமே என் பிஞ்சு கைகளை நான் உங்களால் தான் பழிக்கிறேன்
சுவர்களிலும் தீயிட்ட தீயிலும்
பலமுறை பழிவாங்கினேன்
அம்மா உன் அளவிற்கு வீரமில்லாததன் பெயரிலே
வலி தாங்கா கோழையாக காயம் படும் முன்னே விலகிவிட்டேன்
இருந்து உன்னை காண வேண்டும் என்று
உன் சேலையோடு உயிரை மாய்த்து கொள்ள
எடுத்து கம்பியில் மாட்டி தொங்கிவிட்டேன்
எங்கு செய்த பிழையோ சில நொடிகளில்
தரையில் விழுந்திருந்தேன் கழுத்து வலிக்கொண்டது
சுவாரசியமாக இருக்கும் கேட்க்கும் பதில் காரணம் மரணத்தின் வலி அல்லவா
சொல்கிறேன் அதன் வலி கோடி ஊசிகளை கழுத்தில் சொருகியது
சுவாசம் கொஞ்சம் திணறியது கண்கள் வண்ணமிழந்தது
சுற்றி பார்க்கிறேன் ஒன்றும் தெரியவில்லை
சில நொடிகளில் தந்தை தெரிந்தார் அமைதியாக உறங்கி கொண்டிருந்தார்
அவர் கைபட்டையில் வழக்கம் போல் படுத்துக்கொண்டேன்
பிறப்புக்காக அடையாளம் என்னவென்று தெரியாமல் புலம்பினேன்
லட்சியம் ஒன்றை விதைத்துக்கொண்டேன்
அதற்கே வாழ்க்கையை அர்பணித்து உயிர் வாழ்கிறேன்
உடன் இல்லாமலும் என் வாழ்வின் பயணத்தை மற்றிவைத்தவள் நீ தான்
கனவுகளில் தேடினாலும் பேச மாறுக்கிறாய் பாடல்களில் கேட்கிறேன் கண்ணீராய் வழிகிறாய்
பல வருடங்கள் வலி கொஞ்சம் கொஞ்சமாக மறந்தாலும்
உன் நினைவு நாள் அன்று கண்ணீர் கண்களை காணாமல் போகாது
இன்று ஒரு ஒளிஉரு (video)வில் யாரோ ஒருவர் எரிந்த வலியில் கதறி துடித்ததை பார்த்தேன்
ரொம்பங்க்கள் தீயில் சுட்டு எரிகிறது
நீ தியாகம் என்றது பாவமாக மாறியது
ஏன அத்தனை துணிவு கொண்டாய் அத்தனை வலிகள் கண்டாய்
வருங்காலம் நீ இல்லாமல் - எப்படி நலமாகும்
இதோ இன்றும் நான் தவிக்கும் தவிப்புக்கு விடை இல்லாமல் போனது
வலியின் நீட்சி எத்தனை நாள் என்று தெரியவில்லை
வந்துவிடு என் மகளாக அதையே உன்னிடம் வரமாக கேட்கிறேன்
உன் ஜாடையில் உன் போலவே மகளையே வேண்டுகிறேன்
உன்னால் கொண்ட உயிரை அவள் மடியில் விட வேண்டுகிறான்