சத்தியமா இது காதல் கவிதை தான்

சென்னை விமான நிலைய
மேற்கூரை போல்
அடுக்கடுக்காய்
உடைந்து விழும்
உன் நினைவுகளை
பொறுக்கியெடுத்து
கவிதை மீட்டுகிறேன்...

கட்சி போஸ்டரை போல்
எங்கும் திரும்பினாலும்
உன் முகமே...

கேப்டனை போல்
தினமும் உளறுகிறேன்
உன் (கள்)ள சிரிப்பை
பருகியதால்...

மருத்துவர் அய்யாவின்
முதல்வர் தவம் போல்
என் தவம்
உன்னை தேடியே...

ஆளுங்கட்சி
அமைச்சரின் முதுகில்
கட்சி ஆளுமை
ஏறி அமர்வதை போல்
என் முதுகில்
எப்போதும்
உன் ஞாபகங்கள்...

காற்றடிக்கும்
திசையிலெல்லாம் திரும்பும்
மக்கள் நல கூட்டணி போல்
என் மனம்
நீ செல்லும்
திசை நோக்கியே
நடைபோடுகிறது...

அரசியல்வாதிகளின்
ஊழல் போன்றது
என் காதல்
நாளுக்கு நாள்
அதிகரிக்குமே தவிர
ஒருபோதும்
குறையவே குறையாது...

மழைக்காலத்தில்
பள்ளிக் குழந்தைகளுக்கு
இரமணன் போல்
எப்போதும்
எனக்கு
நீ மட்டுமே...

ம்ம்ம்ம்ம்.....
உன் பதிலுக்காக
காத்திருக்கிறேன்...

எழுதியவர் : (3-Apr-16, 1:08 pm)
பார்வை : 270

மேலே