உலர்ந்து போன என் காதல்

பாழாய்ப் போன
காதல் போன வழி
தெரியாததால்
நான் இன்னும் விழி
மூடி தூங்கவில்லையே
வாழ்வின் வெளிச்சத்தை
எல்லாம் இருட்டாக்கி
என் வாழ்வை திசை மாற செய்தவளே
நீ போன இடம் தான் எங்கே....
காதல் கொண்டு என்
அருகில் வந்தாய்
ஆயிரம் இனிமையான
நினைவுகளை விதைத்தாய்
விதைத்த விதைகள்
எல்லாம் உன் ஈரம் இன்றி
வாடி வதங்கி நின்று
பெருமூச்சு விடுக்கின்றன..
நீயோ வர விருப்பம்
இன்றி எங்கு போனாய்யடி
நீ என்னை பிரிவாய்
என்று தெரிந்து இருந்தால்
அப்பவே காதல் கருவை
கலைத்து இருப்பேனடி