மொழியெல்லாம் இனிக்கிறதே

அமுதினும் அரிய எச்சில்
தேனொழுகும் உதடசைத்து
விண்மீன்கள் கோர்த்து செய்த
வெள்ளை பற்களின் நடுவே
கொழகொழக்கும் அல்வாபோன்ற
நாவினை அலையவிட்டு
மன்மதவில் புருவங்களை
குவித்தும் விரித்தும்
பால்மிதக்கும் திராட்சைவிழியை
பலவிதமாய் உருட்டி
மோகன புன்னகையோடு
நீ பேசும் வார்த்தைகளில்
மொழியெல்லாம் இனிக்கிறதே....!
மேலுதட்டை முட்டி
கீழுதட்டை குவித்து
கிளிமூக்கால் இடித்து
பின்னங்கால் உயர்த்தி
பிடரியில் கோதி-
இறுக்கமாய் அணைத்து-en
கீழுதட்டில் தீயாய்
கிறங்க நீதந்த முத்தத்தில்
நினைவெல்லாம் எப்போதும்
உன் உதட்டையே கடிக்கிறதே....

எழுதியவர் : காசி. தங்கராசு (4-Apr-16, 3:07 am)
பார்வை : 124

மேலே